விளையாட்டு

பாகிஸ்தான் மீதொரு மற்றொரு துல்லிய தாக்குதல் : உலகக் கோப்பை பற்றி அமித்ஷா

பாகிஸ்தான் மீதொரு மற்றொரு துல்லிய தாக்குதல் : உலகக் கோப்பை பற்றி அமித்ஷா

webteam

உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாக், பவுலிங்கை தேர்வு செய்ய, பின்னி பெடலெடுத்தது இந்தியா. 337 என்ற கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட, விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “ பாகிஸ்தான் மீது இந்திய அணி தொடுத்துள்ள அடுத்த தாக்குதல் இது , இதன் முடிவுகள் முன்னது போன்றதே. மிகச்சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனையும் கவர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், இரயில்வே அமைச்சர் என இன்னும் பலரும் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.