விளையாட்டு

“அடுத்தடுத்து ஸ்டம்பிங்” - 800 விக்கெட் சாய்த்தார் தோனி

“அடுத்தடுத்து ஸ்டம்பிங்” - 800 விக்கெட் சாய்த்தார் தோனி

rajakannan

ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் தோனி இரண்டு முக்கிய ஸ்டம்பிங் செய்தார். இந்த விக்கெட்கள் மூலம் சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட் என்ற புதிய மைல்கல்லை தோனி எட்டியுள்ளார். 

ஆசிய அளவில் முதல் விக்கெட் கீப்பராக தோனி 800 விக்கெட் சாய்த்துள்ளார். டெஸ்ட் 294, ஒருநாள் போட்டி 419, டி20 போட்டி 87 விக்கெட்களை எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 998 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். கில்கிறிஸ்ட் 905 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

அதோடு, 184 ஸ்டம்பிங் செய்து தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 139 ஸ்டம்பிங்களுடன் சங்ககாரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.