இத்தாலியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஆண்ட்ரியா பிர்லோ அனைத்து வகையான கால்பந்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
இத்தாலியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஆண்ட்ரியா பிர்லோ.அமெரிக்காவின் மேஜர் சாக்கர் லீக் போட்டியில் நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடி வந்த பிர்லோ, கடைசியாக கொலம்பஸ் க்ரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். 38 வயதாகும் பிர்லோ, இத்தாலி அணிக்காக 116 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்த பெருமைக்குரியவர்.
ஓய்வு குறித்து தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள பிர்லோ, தான் ஓய்வு பெறுவதற்கான தருணம் வந்துவிட்டதாகவும், இதுவரை தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எனக்கு ஆதரவாக உள்ள ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள் என உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.