விளையாட்டு

வார்னர், பாண்டே அதிரடி - 175 ரன் குவித்த ஹைதராபாத் அணி

வார்னர், பாண்டே அதிரடி - 175 ரன் குவித்த ஹைதராபாத் அணி

rajakannan

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வார்னர், மணிஷ் பாண்டே அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 175 ரன் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோவ் ஹர்பஜன் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். பின்னர் வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். குறிப்பாக, மணிஷ் பவுண்டரிகளாக விளாசினார். 

மணிஷ் 25 பந்துகளிலும், வார்னர் 39 பந்துகளிலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடிய வார்னர் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இருப்பினும் அவரது ஓவரில் 39 ரன்கள் எடுக்கப்பட்டது. அதேபோல், இம்ரான் தஹிர் 4 ஓவர் வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.