விளையாட்டு

மனைவி நிறைமாத கர்ப்பம்: முகமது ஆமிர் ஆப்சென்ட்

மனைவி நிறைமாத கர்ப்பம்: முகமது ஆமிர் ஆப்சென்ட்

webteam

உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குமான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், உலக லெவன் அணிக்கு தென்னாப்பிரிக்காவின் டுபிளிசிஸ் கேப்டன். இந்தப் போட்டிகள் நாளை (செப்.12), செப்.13 மற்றும் செப்.15-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது. அவர் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் முகமது ஆமிர் மனைவியுடன் லண்டனில் இருக்கிறார். அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.