விளையாட்டு

வெற்றியின் கட்டாயத்தில் இந்தியா ! இன்று 2-ஆவது ஒருநாள் போட்டி

வெற்றியின் கட்டாயத்தில் இந்தியா ! இன்று 2-ஆவது ஒருநாள் போட்டி

jagadeesh

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30-க்கு போட்டி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் இழப்பை தவிர்க்க கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்தப் போட்டியில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் ஹெல்மெட்டில் பந்து பட்டதால் காயமடைந்தார். அவருக்கு பெங்களூரு என்சிஏவில் சிகிச்சை தரப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டா்கள் கேதார் ஜாதவ் அல்லது ஷிவம் துபே என இருவரில் ஒருவா் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல பும்ரா, ஷமி, குல்தீப் ஆகியோரின் பந்துவீச்சை கடந்த போட்டியில் எளிதாக சமாளித்து ஆஸி அணி. இதனால் அணியில் பங்கேற்கவுள்ள 11 பேரை சேர்ப்பதில் இந்திய அணியில் குழப்பம் நிலவுகிறது.