விளையாட்டு

ஜெர்ஸியை கழட்டி வீசிவிட்டு பாதியிலேயே வெளியேறிய அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் அன்டோனியோ

EllusamyKarthik

அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட விளையாட்டின் தொழில்முறை விளையாட்டு வீரர் அன்டோனியோ பிரவுன், டம்பா பே புக்கன்சீர் (Tampa Bay Buccaneers (Buc) அணிக்காக விளையாடி வந்தார். இந்த அணி தேசிய கால்பந்தாட்ட லீக் (NFL) அணிகளில் முக்கியமான அணியாகும். நேற்று நியூயார்க் ஜெட்ஸ் அணியுடன் இந்த அணி மோதியது. 

Buc அணியின் வொய்ட் ரிஸிவர் ரோலை அன்டோனியோ கவனித்து வந்தார். இந்தப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த அவர் திடீரென பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதுவும் ஜெர்சி, Knee பேட், கிளவுஸ் என அனைத்தையும் கழட்டி போட்டுவிட்டு ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி லாக்கர் ரூமுக்குள் சென்றுள்ளார். அவரை ஆசுவாசப்படுத்த சக அணி வீரர்கள் முயன்றும் அவர் அடங்க மறுத்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தனியார் வாகனம் மூலம் விமான நிலையம் சென்றுள்ளார். 

முதற்கட்ட தகவலின் படி அவர் அணியை விட்டு வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் Buc அணி பயிற்சியாளர் Bruce Arians, ‘அவருக்கு இனி எங்கள் அணியில் இடம் இல்லை’ என ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார். இந்த போட்டியில் Buc அணி வெற்றி பெற்றிருந்தது.