விளையாட்டு

அரை சதம் விளாசினார் அம்பத்தி ராயுடு : வெற்றியை நோக்கி சிஎஸ்கே

அரை சதம் விளாசினார் அம்பத்தி ராயுடு : வெற்றியை நோக்கி சிஎஸ்கே

webteam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடு அரை சதம் அடித்து அசத்தினார்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அந்த அணியில் திவாரி 42 ரன்களை குவித்திருந்தார். சென்னை அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்ஸன் 4 (5) ரன்களிலும், முரளி விஜய் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் டுபிளசிஸுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் அவர் அரை சதம் அடித்து அசத்தினார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.