விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 'குவாரண்டைன்' தொடங்கினார் ஜடேஜா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 'குவாரண்டைன்' தொடங்கினார் ஜடேஜா

jagadeesh

இங்கிலாந்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

இங்கிலாந்தின் சுவுத்தாம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கான இந்திய அணி கொரோனா விதிமுறையின் கீழ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது குறித்து தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட அவர் " இங்கிலாந்து தொடருக்கான பயணம் மும்பையில் தொடங்கியது '' எனத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் 'ஆல்-ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா, இதுவரை 51 டெஸ்ட், 168 ஒருநாள், 50 சர்வதேச டி20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.