விளையாட்டு

“நாளைய ஆட்டத்திற்கு நாங்கள் ரெடி” - ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

EllusamyKarthik

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் கனவுடன் களம் காண்கின்றன. 

நியூசிலாந்து வெற்றி பெற்றால் அது இந்திய அணியை சூப்பர் 12 சுற்றோடு வெளியேற செய்துவிடும். அதுவே ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கும். 

இந்நிலையில் ரஷீத் கான் தனது இன்ஸ்டா பதிவில் இந்த போட்டி தொடர்பாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார். “நாளைய ஆட்டத்திற்கு நாங்கள் தயார்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த பதிவில் ரஷீத் பேட்டிங் பயிற்சி செய்கிறார்.