விளையாட்டு

படமாகிறது தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை!

படமாகிறது தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை!

webteam

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘மாரியப்பன்’ என்ற பெயரில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவரின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஐஸ்வர்யா தனுஷ் படமொன்றை உருவாக்க இருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக உள்ள இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கும் ஐஸ்வர்யா தனுஷுக்கு சமூக வலைதளத்தில் இருக்கும் பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சமீபத்தில் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி வெளியான ‘தங்கல்’ படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த 2010 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மகாவீர் சிங் போகத் அவர்களின் மகள் கீதா போகத் மற்றும் அவரது தங்கை பபிதா ஆகியோரை மல்யுத்த களத்துக்குக் கொண்டு வரச் செய்த மகாவீரின் போராட்டமே படத்தின் கதை. இதேபோன்று ‘மாரியப்பன்’ படமும் அமையும் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.