விளையாட்டு

பகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..!

webteam

இந்தியா-பங்களாதேஷ் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக இந்த மாதம் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. வழக்கமாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். அந்தவகையில் இந்தப் போட்டியில் முதல் முறையாக எஸ்.ஜி நிறுவனத்தின் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. 

இதற்காக முதல் முறையாக எஸ்.ஜி நிறுவனம் புதிதாக பிங்க் நிற பந்துகளை தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் குக்குபரா மற்றும் டியூக் நிறுவனத்தின் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,“பங்களாதேஷ் டி20 தொடருக்கு எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல பங்களாதேஷ் உடன் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு எஸ்.ஜி பந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே பகலிரவு டெஸ்ட் போட்டிக்கும் எஸ்.ஜி பிங்க் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென்றால் ஒரே தொடருக்கு இரண்டு விதமான பந்துகளை பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.