விளையாட்டு

உலகக்கோப்பை போட்டியில் ஒரு குட்டி தேசத்தின் கனவு

உலகக்கோப்பை போட்டியில் ஒரு குட்டி தேசத்தின் கனவு

webteam

3 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்டுள்ள ஐஸ்லாந்து, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாகக் களமிறங்குகிறது. உலகக் கோப்பைக்கு ஐஸ்லாந்து அணி கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கலாம்.

உலகத் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஐஸ்லாந்து அணி, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஐ பிரிவில் இடம் பெற்றிருந்தது. குரேயேஷியா, உக்ரைன் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது ஐஸ்லாந்து. கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொசோவோ அணியை வீழ்த்தியதன் மூலம் 21ஆவது உலகக் கோப்பை போட்டிக்கான தகுதியை உறுதி செய்தது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற சிறப்பையும் ஐஸ்லாந்து அணி பெற்றது.

ஐஸ்லாந்து அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற துருப்புச் சீட்டாகத் திகழ்ந்தார் கில்ஃபி சிகர்ட்ஸ்சன். மத்திய கள வீரரான சிகர்ட்ஸ்சன், தகுதிச் சுற்றில் 4 கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.

உலக கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜென்டினா, குரோஷியா, நைஜீரியா அணிகளுடன் டி பிரிவில் ஐஸ்லாந்து அணி இடம் பெற்றுள்ளது. யூரோ கோப்பையில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதி வரை முன்னேறிய ஐஸ்லாந்து அணி, உலகக்கோப்பையிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களம் காண்கிறது