தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியில் டி வில்லியர்ஸ், ஸ்டைன் ஆகிய வீரர்கள் நீண்ட இடைவேளைக்கு பின் இணைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியில் முன்னனி வீரர்களாக டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்டைன் ஆகியோர் திகழ்கின்றனர். ஆனால் காயம் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின் டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாட வில்லை. இதேபோல், தோள்பட்டை வலி காரணமாக இந்தாண்டு சர்வதேச போட்டிகள் எதிலும் ஸ்டைன் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் டூ பிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ், ஸ்டைன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோர்னே மோர்கல், பிலாண்டர் ஆகிய அனுபவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.