விளையாட்டு

அன்று அப்ரிடி பயன்படுத்தியது சச்சினால் பரிசளிக்கப்பட்ட பேட் - நினைவை பகிர்ந்த பாக்., வீரர்

webteam

அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தபோது அப்ரிடி பயன்படுத்திய பேட் சச்சினால் பரிசளிக்கப்பட்டது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்

தன்னுடைய இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி அதிவேக சதம் என்ற சாதனையை படைத்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். அந்த ஆட்டத்தில் அவர் 40 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 18 வருடங்கள் அந்த சாதனையை யாருமே முறியடிக்கவில்லை.

அன்று அப்ரிடியின் அதிரடிக்கு காரணமாக அவர் கையில் இருந்த பேட் அவருக்கு சொந்தமானது இல்லை என்றும் அது சச்சின் பரிசளித்த பேட் என்றும் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமத். இது குறித்து தெரிவித்துள்ள அவர், அப்போது அப்ரிடி பந்துவீச்சாளர். 6வது களம் இறங்குவார்.

ஆனால் இலங்கைக்கு எதிரான வியூகத்திற்காக அப்ரிடியை 3வதாக இறக்க திட்டமிட்டனர். அப்போது வாகர் யூனிஸ் ஒரு பேட்டை கொடுத்து அப்ரிடியை ஆட சொன்னார். அது சச்சினால் பரிசாக கொடுக்கப்பட்ட பேட். அந்த ஆட்டத்திற்கு பிறகு ஒரு பந்துவீச்சாளர் என்ற நிலையில் இருந்து பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், கேப்டன் என பல இடங்களுக்கு அப்ரிடி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்