விளையாட்டு

21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர் - ரஷித்கான் சாதனை

21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர் - ரஷித்கான் சாதனை

EllusamyKarthik

21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரஷீத் கான். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கிரக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் டெஸ்ட், ஒருநாள், டி20 என தனது தேசிய பணியை செய்து வருகிறார். இந்நிலையில் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அவர். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 99.2 ஓவர்களை அவர் வீசியுள்ளார். அதில் 20 மெய்டன் ஓவர்களை வீசிய அவர் 275 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 36.3 ஓவர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 62.5 ஓவர்களையும் ரஷீத் வீசியுள்ளார். அதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக கடந்த 2002 இல் 98 ஓவர்களை வீசியதே 21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓவர்கள் வீசிய சாதனையாக இருந்தது. 

அதற்கு முன்னதாக 1998 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் 113.5 ஓவர்களை வீசியிருந்தார்.