விளையாட்டு

சாதனைப் படைத்தார் ஆப்கான் ரஷித்!

சாதனைப் படைத்தார் ஆப்கான் ரஷித்!

webteam

ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். 19 வயதான இவர், 44 ஒரு நாள் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மிகக் குறைந்த போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் இவர். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் ரஷித் கான்.

ஜிம்பாப்வேயின் ஹராரேவில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி நேற்று விளையாடி வெற்றி பெற்றது. இதில் அந்நாட்டு வீரர் ஷாய் கோப் விக்கெட்டை வீழ்த்தியபோது, 100-வது விக்கெட் என்ற மைல்கல்கை ரஷித் அடைந்தார்.

ஒரு நாள் தரவரிசையில், இந்திய வீரர் பும்ராவும், ரஷித் கானும் முதலிடத்தில் உள்ளனர். மிகக்குறைந்த வயதில் ஐசிசி தரவரி சையில் முதலிடத்தைப் பிடித்தவர், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1994ம் ஆண்டு பிடித்தார். அதையும் ரஷித் முறி யடித்துள்ளார்.

வரும் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார், ரஷித் கான்.