விளையாட்டு

278 ரன்கள் குவித்து ஆப்கன் உலக சாதனை - 162 விளாசினார் ஸஸாய்

278 ரன்கள் குவித்து ஆப்கன் உலக சாதனை - 162 விளாசினார் ஸஸாய்

rajakannan

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

டேராடூனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா ஸஸாய், உஸ்மன் கானி களமிறங்கினர். ஸஸாய் சிக்ஸர்களாக விளாசி அயர்லாந்து பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். அவருக்கு துணையாக கானியும் பவுண்டரிகளை அடித்து ரன்களை குவித்தார்.

கானி 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் குவித்தது. அடுத்து வந்தவர்கள் சொதப்பினாலும், ஸஸாய் தொடர்ந்து அதிரடியாய் விளையாடி ரன்களை குவித்தார். 

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. ஸஸாய் 62 பந்துகளில் 162 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 16 சிக்ஸர்களையும், 11 பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார்.

சில சாதனைகள் மற்றும் மைல்கல்கள்

  • டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப்பட்ச ஸ்கோர் - 278
  • டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்னர்ஷிப் - 236 (ஸஸாய்-கானி)
  • தனிப்பட்ட நபரின் அதிகபட்ச சிக்ஸர்  - 16
  • ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர்  - 22
  • தனிப்பட்ட நபரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் - 162  ஸஸாய்

இதனையடுத்து, 279 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வரும் அயர்லாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் குவித்துள்ளது.