விளையாட்டு

"என்னுடைய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது!" - ஆடம் ஜாம்பா விளக்கம்

jagadeesh

ஐபிஎல் பயோ பபுள் குறித்து தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஜாம்பா விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பரவல் சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனும், சுழற்பந்துவீச்சாளருமான ஆடம் ஜாம்பாவும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா சூழல் அதகிரித்ததன் விளைவாகவே அவர்கள் விலகினார்கள்.

இது தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த ஆடம் ஜாம்பா " "ஐபிஎல்லுக்காக சில வாரங்களாக பயோ பபுளில் இருக்கிறோம். ஆனால் நான் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை. ஒருவேளை இது இந்தியாவாக இருப்பதால் எனக்கு இப்படி நினைக்க தோன்றுவதாக நினைக்கிறேன். இந்தியாவில் சுத்தம் சுகாதாரம் எப்படிப்பட்டது என சொல்லி வளர்க்கப்பட்டதால் இங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் பாதுகாப்பானதாக எனக்கு தோன்றவில்லை" என்றார்.

இப்போது இது குறித்து ஆடம் ஜாம்பா விளக்கமளித்துள்ளார் "நான் ஒருபோதும் ஐபிஎல் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தின் உள்ளே வைரஸ் நுழைந்துவிடும் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பானவர்களின் கையில் நடந்துக்கொண்டு இருக்கிறது, தொடர் சிறப்பாக முடியும்" என தெரிவித்துள்ளார்.