விளையாட்டு

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ - நடராஜனை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ - நடராஜனை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!

EllusamyKarthik

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்தியாவுக்காக விளையாடினார் தமிழக வீரர் ‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்டான இடக்கை பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன். 

இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் நடராஜனை ட்விட்டரில் பாராட்டி உள்ளார் நடிகர் சிவர்கார்த்திகேயன்…

“நல்ல எப்போர்ட் கொடுத்து விளையாடினீர்கள் சகோ. ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரா முதல் ஆட்டத்தை விளையாடியது அற்புதம். உங்களை இந்தியாவின் நீல நிற ஜெர்சியில் பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் எல்லோருக்கும் பெருமையான தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என ட்வீட் செய்துள்ளார் அவர்.

சிவர்கார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.