விளையாட்டு

ஐபிஎல்: விராத் கோலி இல்லை, ஏபிடி வில்லியர்ஸ் கேப்டன்

ஐபிஎல்: விராத் கோலி இல்லை, ஏபிடி வில்லியர்ஸ் கேப்டன்

Rasus

இந்தியன் பிரீமியர் லீகின் முதல் சில போட்டிகளில் விராட் கோலிக்கு பதிலாக ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பார் என தெரிகிறது.

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து விராத் முழுமையாக மீண்டு வராத பட்சத்தில் ஏபி டி வில்லியர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வழி நடத்துவார் என கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பயிற்சிகாக ஏப்ரல் 2-ம் தேதி விராத் கோலி இணைவார். ஆனால் அவர் போட்டிகளில் பங்கேற்பது அவரின் காயத்தை பொருத்து முடிவு செய்யப்படும். விராத் கோலி இல்லாத நிலையில், இளம் வீரர்கள் சர்பராஸ் கான் அல்லது மன்தீப் சிங் அணியில் இடம் பெற நிறைய வாய்ப்புள்ளதாகவும், பெங்களூர் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.