விளையாட்டு

பதக்கத்தை உறுதி செய்ததோடு கிராமத்துக்கு சாலை வசதி கிடைக்கச் செய்த லவ்லினா

jagadeesh

அசாமைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்வினா இந்தியாவுக்கு பதக்கத்தை மட்டும் உறுதி செய்யவில்லை, தனது கிராமத்துக்கு உறுதியான தார்ச்சாலை அமைக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளார்.

அசாமில் உள்ள பரோமுகியா குக்கிராமத்தைச் சேர்ந்த லவ்லினா டோக்யோ ஒலிம்பிக்கில் வெல்டர்வெயிட் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து அவரது கிராமத்துக்கு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது மாநில அரசு. சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைக்கும் பணி இரவு பகலாக அரங்கேறி வருகிறது.

தேசத்துக்கு மட்டுமல்லே, கிராமத்துக்கே விடியலை கொண்டு வரும் தங்கள் நாயகியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர் பரோமுகியா மக்கள்.