விளையாட்டு

பிரேசில்: தவறான ஆட்டம் என கூறியதால் ஆத்திரம்; கால்பந்து நடுவரை கடுமையாக தாக்கிய வீரர்

பிரேசில்: தவறான ஆட்டம் என கூறியதால் ஆத்திரம்; கால்பந்து நடுவரை கடுமையாக தாக்கிய வீரர்

JustinDurai
கால்பந்து போட்டியின் போது நடுவரை கொல்ல முயன்றதாக பிரேசில் நாட்டு வீரர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் குரானி என்ற பகுதியில் உள்ளூர் கால்பந்து லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சா பாலோ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர் வில்லியம் ரிபைரோ விதிகளுக்கு மாறாக ஆடியதாக நடுவர் அறிவித்தார். இதனால் கடும் கோபமடைந்த வீரர் வில்லியம் ரிபைரோ நடுவரை தனது தலையால் முட்டி கீழே தள்ளி காலால் உதைத்தார். வலியால் துடித்த நடுவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவல் துறையினர் மைதானத்திற்கு ஓடிவந்து வீரர் ரிபைரோவை இழுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஆட்டம் கால் மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் கால்பந்து வீரர் வில்லியம் ரிபைரோ மீது காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வில்லியம் ரிபைரோவை அணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக சா பாலோ ஸ்போர்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.