விளையாட்டு

ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் .. அடுத்தடுத்து இரண்டு சதம்.. அசத்தும் தவான்

ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் .. அடுத்தடுத்து இரண்டு சதம்.. அசத்தும் தவான்

webteam

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த தவான், ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 5000 ரன்களை குவித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர் தவான் மட்டும் 62 பந்துகளுக்கு 106 ரன்களை விளாசியிருந்தார்.

கடந்த போட்டியில் சென்னைக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தவான், அடுத்த போட்டியிலேயே 2வது சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களையும் அவர் கடந்திருக்கிறார்.