விளையாட்டு

2வது டெஸ்ட் : மழையால் தாமதமானது டாஸ்

2வது டெஸ்ட் : மழையால் தாமதமானது டாஸ்

webteam

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் டாஸ் மழையால் தாமதமானது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற உறுதியில் இந்திய அணி உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் லண்டனில் மழை பெய்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.