இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. பர்சபரா மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இது ஆகும். இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. தொடரை இழக்காமல் இழக்காமல் இருக்க, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.