இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. அதன்படி முதல் டி20 போட்டி அசாமில் உள்ள கவுகாத்தியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு தொடங்கயிருந்தது. இதற்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கவுகாத்தியில் பெய்த தொடர் மழையால் போட்டி ரத்தானது.
இந்நிலையில் இந்தூரில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.