விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி- இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு

webteam

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணிக்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இந்த போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும் என்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீசுமாறு அழைத்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே டிகாக்கை போல்ட் ஆக்கி அதிர்ச்சியளித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். பின்னர் நிதானமாக விளையாடிய மாலன் மற்றும் ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி சீரான விகிதத்தில் ரன்களை சேர்க்க முயற்சி செய்தபோது 40 ரன்கள் இருந்த நிலையில் 2ஆவது விக்கெட்டை இழந்தது.

பின்னர் களமிறங்கிய மார்க்ரம் உடன் கைக்கோர்த்த ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த கூட்டணி 278 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் 74 மற்றும் 79 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். சிறப்பாக பந்துவீசிய முகம்து சிராஜ் 10 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி ஆடிவருகிறது.