இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் தோற்றால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இழக்க நேரிடும். டெஸ்ட் தொடரை இலங்கை அணியும் ஒரு நாள் தொடரை எப்படியாவது கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அணி விவரம்:
ரோகித் (கேப்டன்), தவான், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, தோனி, புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சேஹல்.
கடந்த போட்டியில் ஆடிய குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறவில்லை. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.