விளையாட்டு

சிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்

சிக்ஸர் அடித்து இரட்டை சதம் - மயங்க் அகர்வால் அசத்தல்

webteam

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். 

இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் ஷர்மா 6 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த புஜாரா அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 0 (2) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹானே - மயங்க் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரஹானே 86 (172) ரன்களில் விக்கெட்டை இழந்த போதிலும், மயங்க் நிலைத்து ஆடினார். பின்னர் வந்த ஜடேஜாவுக்கு அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார் ஜடேஜா.

இந்நிலையில், சிக்ஸர் அடித்து தனது 2வது இரட்டை சதத்தை மயங்க் அகர்வால் பதிவு செய்தார். இந்திய அணி 100 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக அவர் இரட்டை சதம் அடித்து இருந்தார்.