நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா தலா 80 ரன்கள் எடுத்தனர். கேப்டன் கோலி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் குப்தில்(4), முன்ரோ(7) ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன், லாதம் இருவர் மட்டும் சிறிது நேரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். இருப்பினும் வில்லியம்சன்(28), லாதம்(39) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சாஹல், பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு கடைசி போட்டி ஆகும். இந்திய அணி வெற்றி உடன் நெஹ்ராவை வழியனுப்பியுள்ளது. நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.