கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். மேலும், இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தனது 6-வது தொடர் தோல்வியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பையில் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பெரிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிடும். ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள்தான் தகுதிச்சுற்றில் விளையாடி உலகக்கோப்பைக்குள் நுழையும்.
1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இலங்கை தற்போது 2019-ல் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் நேரடியாக பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.