விளையாட்டு

கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாட்டு கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துகள்!

கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாட்டு கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துகள்!

EllusamyKarthik

16 வயது நிறைந்த அந்த சிறுவன் 64 கட்டங்கள் அடங்கிய சதுரங்க விளையாட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார். பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்களில் ஒருவர் அந்த சிறுவன். அவர் வேறு யாருமில்லை நம் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா தான். 

அவர் சதுரங்க விளையாட்டுக்கான FIDE தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வே வீரர் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர்!

“இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள் பிரக்ஞானந்தா. தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள 16 வீரர்களில் அனுபவமிக்கவர் கார்ல்சன். அவரை நீங்கள் வீழ்த்தியது சாதனை. சதுரங்க விளையாட்டில் உங்களது வெற்றி தொடரட்டும்” என தெரிவித்துள்ளார். 

 

மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு முதலமைச்சர்

“சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த, தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்” என தெரிவித்துள்ளார். 

 

அஷ்வின் - கிரிக்கெட் வீரர்!

“கார்ல்சனை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளீர்கள். பிரக்ஞானந்தா. உங்களது சாதனையை கண்டு தேசமே பெருமை கொள்கிறது” என அஷ்வின் தெரிவித்துள்ளார். 

இதே போல பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.