விளையாட்டு

100-வது ஒருநாள் போட்டி: சாதனையை நோக்கி ஸ்டீவன் ஸ்மித்

100-வது ஒருநாள் போட்டி: சாதனையை நோக்கி ஸ்டீவன் ஸ்மித்

webteam

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தமது 100-வது ஒருநாள் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இந்திய அணியுடனான போட்டியில் களமிறங்கும் பட்சத்தில் அவரது 100வது ஒருநாள் போட்டியாக அது அமையும். இந்த சாதனையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஸ்மித் கூறினார். இந்திய அணியுடனான அரையிறுதியில் சதம் விளாசியதே தம் வாழ்நாளில் மறக்க முடியாத ஆட்டமாக கருதுவதாகவும் ஸ்மித் குறிப்பிட்டார்.