விளையாட்டு

“முதல் டி20” சிறப்பம்சங்கள் - ஓபனிங் பேட்ஸ்மேனாகும் வில்லியம்சன் ?

“முதல் டி20” சிறப்பம்சங்கள் - ஓபனிங் பேட்ஸ்மேனாகும் வில்லியம்சன் ?

webteam

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய-நியூஸிலாந்து எதிரான முதல் டி20 ஒருநாள் போட்டி நாளை வில்லிங்டானில் உள்ள நெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 

அணிகள் நிலவரம் : 

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதால், கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. இதனால் ரோகித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினார். அதேபோன்று நாளைய டி20 போட்டியிலும் கோலி விளையாடவில்லை. இதனால் அந்த இடத்தில் சுப்மன் கில் அல்லது ரிஷப் பந்த் களமிறக்கப்படலாம் எனப்படுகிறது. நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் அணியில் இல்லை. எனவே அந்த இடத்தில் கேப்டன் வில்லியம்சனே களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி :

ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், சும்பன் கில், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்ட்யா அல்லது கேதர் ஜாதவ், புவனேஷ்குமார், கலீல் அகமது, சாஹல் அல்லது குல்தீப்.

நியூஸிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோலின் முன்ரோ, டிம் செஃபெர்ட், ராஸ் டைலர், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராந்தோம், மிட்செல் சாண்ட்நேர், ஷ்காட் குக்கிலைஜின், ப்ரூஷ்வெல், லக்கி ஃபெர்கசன் அலல்து டிம் சவுதி, ஈஸ் சோதி.

தங்கள் அணியில் தொடக்க வீரர் குப்தில் இல்லாதது தொடர்பாக பேசிய நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “குப்தில் இடத்தில் யார் விளையாடுவார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது இடத்தில் விளையாட நிறைய வீரர்கல் தயாராகவுள்ளனர். சில திறமையான வீரர்கள் அந்த இடத்தில் விளையாடவுள்ளதால், அதற்கேற்றவாறு அணியின் பேட்டிங் மாற்றப்படும். நான் கூட அந்த இடத்தில் (தொடக்க வீரராக) விளையாடலாம்” என்றார்.