விளையாட்டு

'பிருத்வி ஷா போல சுப்மன் கில் சொதப்பமாட்டார்' - அஜய் ஜடேஜா நம்பிக்கை!

webteam

சுப்மன் கில்லின் இந்தச் சதம் அவரின் ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்தும் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அஜய் ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் 152 பந்துகளில் 110 ரன்களை விலாசி சர்வதேச போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நிச்சயம் வங்கதேசத்தை வீழ்த்தும் என்று பலரும் கணித்திருக்கும் நிலையில் இப்போது 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வங்கதேசம் வெற்றிப்பெற 513 ரன்களை இந்தியா நிர்ணயித்துள்ளது. இதை சேஸ் செய்து வரும் வங்கதேசம் 141 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில் சதம் குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.

அதில் ”டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் என்பது மிகப்பெரிய தருணம். இது வெறும் ஒரு எண் ஆனால் மிக முக்கியமான ஒன்று. இது ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது, இந்த சதம் அத்தகைய பெருமை வாய்ந்தது. சுப்மான் கில் நேற்றைய ஆட்டத்தை அவரின் சதத்தின் மூலம் காப்பாற்றியுள்ளார் என கூறலாம். 18 சதங்கள் அடித்த புஜாரா, மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு சதம் அடித்ததை கண்டு, சந்தொஷமாக உள்ளது. மேலும் சுப்மன் கில் இந்த சதத்தின் மூலம் அவரின் ஆட்டம் மேலும் மேம்பட்டு பல சாதனைகளை படைப்பார் என நம்புகிறேன். இவருடன் இந்தியா அணியில் நுழைந்த பிருத்வி ஷா தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு அவரின் ஆட்டத்தில் அடுத்தடுத்து எந்த ஒரு முன்னேற்றமும் எற்படவில்லை. சுப்மன் கில் அவ்வாரு ஆக மாட்டார் என்று நம்புகிறேன்" என்றார் அவர்.

- சுஹைல் பாஷா