நான் படிப்படியாக வளர்ந்தவன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கூறியுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சர்ஃபராஸ், ‘மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். அவரது இடத்தை நான் நிரப்புவது சவாலானது. அதோடு டெஸ்ட் போட்டிகள் என்பது எளிதானது அல்ல. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன்’ என்றார்.
மேலும் கூறிய அவர், ‘ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் எனது தலைமையில் சில வெற்றிகளை பெற்றிருக்கிறேன். டெஸ்ட் போட்டியிலும் அதை தொடர்வேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் படிப்படியாக வளர்ந்தவன் நான். ஜூனியர் லெவலில் இருந்து ஒரு நாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டி என கேப்டனாகியிருப்பது பாகிஸ்தானில் நான் மட்டுமாகவே இருப்பேன். இப்போது எனது பொறுப்புகள் அதிகரித்திருக்கிறது’என்றார்.