விளையாட்டு

"உலகக் கோப்பையில் அந்த 30 நிமிடம்"- மனம் திறந்த விராட் கோலி

"உலகக் கோப்பையில் அந்த 30 நிமிடம்"- மனம் திறந்த விராட் கோலி

jagadeesh

உலகக் கோப்பையில் அந்த 30 நிமிடத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது தெரிய வரும் என்று இந்திய அணியன் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும், 85 ரன்களை நேற்றைய போட்டியில் குவித்த கோலிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஆட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கோலி " 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தின் கடைசி 30 நிமிடத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், நாம் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். இப்போதும் அந்த ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருக்கிறது. இந்த அணி அந்தக் கோப்பையை பெறுவதற்கு தகுதியானதுதான். அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த கோலி " இப்போது இருக்கும் இந்திய அணியின் பலமே அதன் வேகப் பந்து வீச்சுதான். இந்தப் பந்துவீச்சை வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும், எந்தப் போட்டியிலும் வெற்றிப் பெறலாம். ஏற்கெனவே வெளிநாட்டில் நடைபெற்ற தொடர்களையும் இந்திய அணி இந்தாண்டு வென்றதே அதற்கு சான்று" என்றார்.