விளையாட்டு

ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சீக்கியர் - வீடியோவை பகிர்ந்து ஹர்பஜன் நெகிழ்ச்சி

webteam

ஆதரவற்ற மூதாட்டி ஒருவருக்கு சீக்கியர் உதவும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசுகள் தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த வீடியோவில் சீக்கியர் ஒருவர் சாலையோரம் உள்ள ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவுப்பொருட்களையும், பணத்தையும் கொடுத்து உதவுகிறார். அத்துடன் அந்த மூதாட்டியை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் தெரிவிக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஹர்பஜன், “இது மிகவும் அற்புதமானது. உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யுங்கள். கொரோனா போருக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹர்பஜன் தனது ட்விட்டரில், “மதம் இல்லை, சாதி இல்லை, மனிதம் மட்டுமே. கொரோனாவையும், வெறுப்பையும் பரப்பாமல் அன்பைப் பரப்புங்கள்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.