இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா ஒரு காட்டமான செய்தியை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா, இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் திடீரென்று ஒரு காட்டமான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் வீரகளின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தேவையில்லாமல் எழுதுபவர்களுக்கு அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐ.சி.சி உலகக் கோப்பைக்குப் பின்னர் வெடித்த சர்ச்சை குறித்து அவர் பேசுகையில், மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினரை நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி தங்களுடன் தங்க வைப்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தன. அதில் குடும்பத்தினர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதுதான் வேதனையாகப்படுகிறது என ரோஹித் கூறியுள்ளார்.
மேலும் அவர் “எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவும்தான் உள்ளன. இந்த விஷயங்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை, என் நண்பர்கள் சிலர் வந்து என்னிடம் சொன்னார்கள். என்னை நம்புகிறீர்களா? இல்லையா? என கேட்டு நான் சிரித்தேன். ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. அவர்கள் என் குடும்பத்தை இழுத்தார்கள். நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள். ஆனால் எனது குடும்பத்தினரை இழுக்க வேண்டாம். அப்படி பேசுபவர்கள் உண்மையிலேயே வேறு எதைப் பற்றியும் அக்கறை காட்டாதவர்கள். குடும்பத்தினர் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சம் என விராட் கோலி கூட உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”என்று பிடிஐக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரோஹித் கூறியுள்ளார்.