ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் மகேந்திர சிங் தோனி இப்போதும் சிறந்தவர்தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. கடந்த சில வருடங்களாக ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் இவர், டி-20 போட்டிகளில் ஆடி வந்தார். கடைசியாக இங்கிலாந்தில் 2018 ஆம் ஆண்டு நடந்த டி-20 தொடரில் பங்கேற்றார். இந்நிலையில் டி-20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க விரும்புவதாக அவர் தெரிவித் துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி கடந்த சில வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. ராயுடு சில தொடர்களில் விளையாடினார். பின்னர் உலகக் கோப்பைத் தொடருக்கு விஜயசங்கர் சேர்க்கப்பட்டு காயம் காரண மாக விலகினார். இப்போது ரிஷாப் பன்ட் விளையாடி வருகிறார். அவர் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடி, ஆட்டமிழப் பது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் ஆட, தான் தயாராக இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித் துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘இந்திய அணியில் நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றிப் பேசப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இறங்கி, நான் ஏற்கனவே விளையாடி இருக்கிறேன். டி-20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப் பை எதிர்நோக்கி இருக்கிறேன். ரிஷாப் பன்ட் ஆடும்போது குழப்பமடைந்து விடுகிறார். அவர் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு ரன் எடுப்பதிலும் தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்தி விக்கெட்டை பறிகொடுக் கிறார். கிரிக்கெட் மனரீதியான விளையாட்டு. தோனி மாதிரியான வீரர்கள் களத்தில் இதுபற்றி வீரர்களிடம் பேசுவார்கள். அப்படி யாராவது அவரிடம் பேச வேண்டும்.
தோனி பற்றி கேட்கிறீர்கள். அவர் சரியான உடல் தகுதியுடன்தான் இருக்கிறார். ஆட்டத்தை சரியாக முடிப்பதில் அவர் சிறப்பானவர். டி-20 உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணியின் சொத்தாக தோனி இருப்பார்’ என்றார்.