விளையாட்டு

“உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை” - மனம் திறந்த கேதார் ஜாதவ்

“உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை” - மனம் திறந்த கேதார் ஜாதவ்

webteam

உலகக் கோப்பையில் தான் சரியாக விளையாடவில்லை என்றும், நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.

டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நத்தத்தில் நடைபெற்ற போட்டியை சிறப்பிக்க இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், “இதுபோன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து ஐபிஎல், ரஞ்சி போட்டிகளில் இடம்பெற மிகவும் உதவுகிறது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்தியா முழுவதும் கவனிக்கப்படுவார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இயற்கை வளம் மிகுந்த அழகான இடமாக நத்தம் இருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் வளர்ந்து வருவது கிரிக்கெட் வளர்ச்சி உதவியாக இருக்கும். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகிறது” என்றார்.