மகாபாரத போர்
மகாபாரத போர் wiki
ஆன்மீகம்

’தானம் - தருமம்’ இரண்டிற்கும் வேறுபாடு என்ன? கொடுத்தும் ஏன் கர்ணன் இறந்தான்? - பரமாத்மாவின் விளக்கம்

Jayashree A

தானத்திற்கும் தருமத்திற்கும் உள்ள வேறு பாடு என்ன என்பது தெரியுமா?

நாம் நிறைய கேள்வி பட்டு இருப்போம்.. நான் யார் வந்து எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுவேன். ஆனாலும், கடவுள் எனக்கு நல்லதே செய்வதில்லை என்று குறைப்பட்டுக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் செய்த தானமானது தர்மத்தில் சேராது. தானம் வேறு தருமம் வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வது தானம். அவர்களிடம் இல்லை என்று தெரிந்து அவர்கள் கேட்காமல் தருவது நாம் தான் தருமம்.

தானத்திற்கும் தருமத்திற்கும் உள்ள வேறுபாட்டை கர்ணனின் கதை மூலமே நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

கர்ணன் தான தருமங்களில் சிறந்தவன் என்று தெரியும். அப்படி பட்ட கர்ணனை போரில் வீழ்த்துவது மிகக்கடினம் என்று கண்ணனே கூறியிருப்பார். ஆகவே, வீரரான, கர்ணனை விவேகத்தினாலேயே வீழ்த்த வைத்தான் கண்ணன். தர்ம யுத்தத்தில் கர்ணனது தேர் சக்கரத்தை சகதியில் புதைபடச்செய்து அந்த நிமிடங்களை அர்ஜூனனுக்கு சாதகமாக்கிக்கொண்டு கர்ணனின் மேல் அம்புகளை எய்த வைத்தான் கண்னன். இருப்பினும் கர்ணனின் உயிரானது அவன் உடலை விட்டு அகலவில்லை. காரணம் அறிந்த கண்ணன் ஒரு கிழவராக மாறு வேடத்தில் வந்து யாசகமாக கர்ணனிடம் அவனது புண்ணியங்களை பெற்று அவனுக்கு மோட்சத்தை அளித்தார்.

அச்சமயம் கர்ணனின் தந்தையான சூரிய பகவானுக்கு ஒரு சந்தேகம் வந்தது. தனது சந்தேகத்திற்கான கேள்வியை கண்ணனிடம் வைத்தார். “கிருஷ்ணரே.. எனது மகன் கர்ணன் தானத்தில் சிறந்தவன். அவனது தானத்தினால் பெற்ற புண்ணியங்களை நீங்கள் யாசகமாக பெற்றீர்கள். அதனால் அவனது புண்ணியங்கள் மேலும் தானே அதிகரிக்கவேண்டும்? அவ்வாறு இருக்கையில் அவன் புண்ணியங்கள் அவனை காப்பாற்றவில்லையே காரணம் என்ன?” என்றார்.

அதற்கு கிருஷ்ணன் அளித்த பதில் இது தான். “எவன் ஒருவன் யாசகம் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்கிறானோ, அந்த உதவியானது தானத்தில் சேரும். அவன் யாசகம் கோரும் முன் அவனது தேவை அறிந்து உதவி செய்தால் அது தர்மத்தில் சேரும். கர்ணன் தர்மம் செய்தவன். அதனால் நான் அவனிடம் புண்ணியத்தை யாசமாகப் பெற்றேன். அவனளித்த இந்த தானம் தருமத்தில் சேராது” என்றார்.

ஒருவர் செய்யும் தருமம் மட்டுமே புண்ணியக் கணக்கில் சேரும். தானம் சேராது. ஒருவரின் புண்ணியத்தைக் கொண்டுதான் அவர்களின் வாழும் வாழ்க்கையானது இருக்கும்" என்றார்.