Today Rasi Palan - 26 July 2025 PT Web
ஆன்மீகம்

ஜூலை 27, 2025 | இந்த ராசிக்கு இன்று அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும்.. இன்றைய ராசிபலன்கள்..!

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ. பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்

Vaijayanthi S

மேஷம் ராசி

பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் உயரும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம் ராசி

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம் ராசி

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப் பொருட்களால் லாபம் ஏற்படும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்த தாமதங்கள் விலகும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

கடகம் ராசி

அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் உயரும். முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம் ராசி

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.

கன்னி ராசி

குடும்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல்கள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

துலாம் ராசி

வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கோபம் விலகும் நாள்.

விருச்சிகம் ராசி

பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

தனுசு ராசி

கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

மகரம் ராசி

நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.

கும்பம் ராசி

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி கற்கும் நிலையில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.

மீனம் ராசி

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்ற பொழிவு மேம்படும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

27:7:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 11 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.

1. திதி: நாள் முழுவதும் திருதியை இன்று

2. நட்சத்திரம்: மாலை 6;54 மணி வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம்

3. ராகு காலம் : மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை.

4. எமகண்டம் மதியம் 12மணி முதல் 1:30 மணி வரை.

5. குளிகை மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை

6. நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9மணி வரை

7. சூலம் : மேற்கு

8. யோகம் : மாலை 6:54மணி மரணயோகம் யோகம் பிறகு சித்த யோகம்

9. சந்திராஷ்டமம் : மாலை 6:54 மணி வரை உத்திராடம் பிறகு திருவோணம்