Today Rasi Palan - 26 July 2025 PT Web
ஆன்மீகம்

ஜூலை 26, 2025 | இந்த ராசிக்கு இன்று பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.. இன்றைய ராசிபலன்கள்..!

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ. பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்

Vaijayanthi S

மேஷம் ராசி

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழப்பம் விலகும் நாள்.

ரிஷபம் ராசி

தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் னவேண்டும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் பொறுமையை கையாளவும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம் ராசி

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிலும் ஆர்வமின்மையான சூழல்கள் உருவாகும். வியாபார விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.

கடகம் ராசி

எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் மத்தியமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சாந்தம் நிறைந்த நாள்.

சிம்மம் ராசி

சுப காரிய முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களிடம் ஏற்பட்ட வேறுபாடுகள் மறையும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டணிகள் ஒத்துழைப்பால் லாபங்கள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

கன்னி ராசி

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மனதிருப்தியை தரும். பண நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதிடம் நிறைந்த நாள்.

துலாம் ராசி

அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம் ராசி

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். ஆராய்ச்சி பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

தனுசு ராசி

மறைமுகமான திறமைகள் வெளிப்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனம் மாற்ற எண்ணங்கள் கைகூடும். வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

மகரம் ராசி

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தடை மறையும் நாள்.

கும்பம் ராசி

வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபார முடிவுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். புதிய துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

மீனம் ராசி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

1. 26:7:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 10 ந் தேதி சனிக்கிழமை , திதி: நாள் முழுவதும் துவிதியை இன்று மாலை 6;11மணி வரை

2. நட்சத்திரம்: ஆயில்யம் பிறகு மகம்

3. ராகு காலம் : காலை 9 மணி முதல் 10:30 மணி வரை.

4. எமகண்டம் மதியம் 1:30மணி முதல் 3 மணி வரை.

5. குளிகை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை

6. நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30மணி வரை

7. சூலம்: கிழக்கு

8. யோகம் : மாலை 6:11மணி மரணயோகம் யோகம் பிறகு அமிர்த யோகம்

9. சந்திராஷ்டமம் : மாலை 6:11 மணி வரை பூராடம் பிறகு உத்திராடம்