rasipalan fb
ஆன்மீகம்

ஜூலை 23, 2025 | இந்த ராசிக்கு எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்குமாம்.. இன்றைய ராசிபலன்கள்..!

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ. பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்

Vaijayanthi S

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே! வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பணி மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களே! ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும் போது கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். அந்நிய தேச பயண சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். ஓய்வு வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம் ராசி அன்பர்களே! குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். நினைத்த சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.

கடகம்

கடகம் ராசி அன்பர்களே! முன்னேற்றம் அடைந்தவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே! மாறுபட்ட அணுகுமுறைகளால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சிலருக்குச் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

கன்னி -ராசி அன்பர்களே! எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிக்கலான நேரத்தில் நினைத்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். வரவு நிறைந்த நாள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.  வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஊக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே! பணிகளைச் செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் ஏற்படும். நெருக்கடியான பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மந்தமான போக்கு குறையும். இயந்திரம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே! கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக செயல்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். பணிகளில் உயர்விற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். வருத்தம் விலகும் நாள்.

கும்பம்

கும்பராசி அன்பர்களே! விலகி இருந்தவர்களின் மூலம் சாதகமான பலன் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அன்பு நிறைந்த நாள்

மீனம்

மீனம் ராசி அன்பர்களே! சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.

நாட்குறிப்பு

23;7:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 7 ந் தேதி புதன்கிழமை. நாள் முழுவதும் சதுர்த்தசி திதி

நட்சத்திரம்: இன்று மாலை 6:51 மணி வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகு காலம் : மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை.

எமகண்டம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை.

குளிகை காலை 10:30மணி முதல்12 மணி வரை

நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15மணி வரை மாலை 4:45 மணி முதல் 5:45 வரை

சூலம் வடக்கு

யோகம் : காலை 6 மணி சித்த யோகம்

சந்திராஷ்டமம் : மாலை 6:51 மணி வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை