12 ராசிகளுக்குமான இன்றைய பலன் (ஆகஸ்ட் 22ஆம் தேதி) என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளல்லாம்..
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் உண்டாகும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரீதி நிறைந்த நாள்.
பொருளாதாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிகம் தொடர்பான காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் அனுகூலம் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். அலுவலகத்தில் நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். சோர்வுகள் விலகும் நாள்.
திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலத் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசுச் செயல்களில் காரிய அனுகூலம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
பேச்சுகளில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை மறையும். வேலையாட்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வரவு கிடைக்கும் நாள்.
வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்களில் கவனத்தோடு செயல்படவும். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
கனிவான பேச்சுக்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் பதட்டமின்றி செயல்படவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு அனுகூலமான பலன்கள் ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.
1. தேதி: மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 6 ந் தேதி வெள்ளிக்கிழமை
2. திதி : மதியம் 22:53 மணி வரை சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை திதி
3. நட்சத்திரம் : ஆயில்யம் நட்சத்திரம்
4. ராகு காலம் : காலை 10:30மணி முதல் 12 மணி வரை.
5. எமகண்டம் : மாலை 3 மணி முதல் 4:30மணி வரை.
6. குளிகை : காலை 7:30மணி முதல் 9 மணி வரை
7. நல்ல நேரம்: காலை 9மணி முதல் 10:30 மணி வரை
8. சூலம் : மேற்கு
9. யோகம் : காலை 6:04 மணி முதல் மரணயோகம்
10. சந்திராஷ்டமம் : பூராடம் நட்சத்திரம்ி