இன்றைய ராசிபலன்கள் 17-08-2025 pt
ஆன்மீகம்

ஆக.17, 2025 | இந்த ராசிக்கு இன்று வெற்றி நிறைந்த நாள்... இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan | இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ.பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்

Vaijayanthi S

மேஷம் ராசி

மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம் ராசி

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.

மிதுனம் ராசி

பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணித துறைகளில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

கடகம் ராசி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் பிறக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல்கள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.

சிம்மம் ராசி

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்

கன்னி ராசி

பூர்விக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்களில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான செயல்களில் இருந்த சோர்வுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

துலாம் ராசி

வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உறவுகளுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒரு விதமான திருப்தி ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்

விருச்சிகம் ராசி

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல்கள் அமையும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு ராசி

உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவியால் விரயங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சொந்த ஊர் சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

மகரம் ராசி

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். துணைவர் வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.

கும்பம் ராசி

பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மீனம் ராசி

குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்புகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

1. தேதி: 17:8:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 1 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை

2. திதி : இரவு 8;47 மணி வரை நவமி திதி பிறகு தசமி திதி

3. நட்சத்திரம் : காலை 6:48மணி வரை கார்த்திகை நட்சத்திரம் பிறகு ரோஹிணி நட்சத்திரம்

4. ராகு காலம் : மாலை 4:30மணி முதல் 6 மணி வரை.

5. எமகண்டம் : மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை.

6. குளிகை: மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை

7. நல்ல நேரம்: காலை 7:45மணி முதல் 8:45 மணி வரை

8. சூலம் : மேற்கு யோகம் காலை 6:48 மணி வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

9. சந்திராஷ்டமம் : காலை 6:48மணி வரை சித்திரை நட்சத்திரம் பிறகு ஸ்வாதி நட்சத்திரம்