பிள்ளையார்பட்டி
பிள்ளையார்பட்டி PT
கதைகள்

பிள்ளையார்பட்டி கற்பக பிள்ளையார் தோன்றியது எப்படி?

Jayashree A

நீங்க பிள்ளையார்பட்டி போய் இருக்கிறீர்களா...? போகவில்லையா? அப்படி என்றால் இதைப்படித்து தெரிந்துக்கொண்டு பிறகு செல்லுங்கள்.

‘பிள்ளையார்பட்டி பிள்ளையார்’ - இவரை கற்பக விநாயகர், திருவீசர் என்றும் அழைப்பார்கள். கற்பகம் என்றால் கேட்டது கிடைக்கும். கற்பக விநாயகர் என்றால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதை உடனடியாக தரக்கூடியவர். விநாயகரை வணங்குவது மிக எளிது. அருகம்புல் இருந்தால் போதும். ஒருநல்ல நிகழ்வு தொடங்கும் முன் இவரை வணங்கி தொடங்கினால் தடை ஏதும் வராது என்பது நம்பிக்கை. இதில் வலம்புரி பிள்ளையாருக்கென்று விஷேஷ சக்தி உண்டு.

அப்படிபட்ட கற்பக விநாயகரை தன்னகத்துக்குள் வைத்திருக்கும் பிள்ளையார்பட்டி என்ற இவ்வூரானது காரைக்குடிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

பிள்ளையார்பட்டி

இந்த கோவிலை குடவரை கோவில் அல்லது குகைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். இதன் காலம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 7ம் நூற்றாண்டைக் கடந்தது.

இங்கு இருக்கும் விநாயகர் பாறையில் செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர். இவர் சுமார் 6 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். கோவிலின் எதிர்புறத்தில் அழகான குளம் ஒன்று உள்ளது.

இங்கு கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் “நாகலிங்கம்” சுவாமி சன்னதியும், பசுபதீஸ்வரர் சன்னதியும் இருக்கிறது. அலங்கார மண்டபத்தை ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

இதன் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கல்வெட்டுகள் இருக்கின்றன. அதன்படி இந்த கோவில் சுமார் 1300 வருடங்களுக்கு முந்தய கோவிலாகும். ஏகாட்டூர்கோன் என்ற சிற்பியால் பிள்ளையார் உருவம் செதுக்கப்பட்ட தகவல் கல்வெட்டில் உள்ளது. இது அனேகமாக மகேந்திரவர்மனின் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளார்கள்.

பிள்ளையார்பட்டி

கல்வெட்டில் எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைஸ்வரம் , தென்மருதூர் என்ற பெயர்களெல்லாம் உள்ளன. இவ்வூரானது முக்காலத்தில் அறியப்பட்டிருப்பதாக கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரத்தார்கள் 12ம் நூற்றாண்டின் முதல் இக்கோவிலில் ஆகம முறைப்படி வழிபாட்டை நடத்தி வருகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் விநாயகரை வழிபட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபடி இருப்பார்கள். இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த கற்பக விநாயகரும் பழமை மாறாத இந்த ஊரும் எப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு நீங்காது.