கிருஷ்ணர்
கிருஷ்ணர் PT
கதைகள்

மன்னிக்ககூடிய குற்றம், மன்னிக்க முடியாத குற்றம் எது தெரியுமா? பகவான் கிருஷ்ணரின் பதில் இதுதான்!

Jayashree A

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குருஷேத்ர போரில், அர்ஜூனன், தனது இரத்த சொந்தங்களுடன் சண்டையிடுவதா? என்று தயங்கிய சமயத்தில் அர்ஜூனனுக்கு கண்னன் சில அறிவுரைகளை கூறுவார். அது தான் பகவத்கீதை. அதில் அர்ஜூனன் தனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை தெளிவுப்படுத்த வேண்டுமாறு கண்ணனிடமும் கேட்பார். அந்த சந்தேகத்தில் ஒன்று தான் குற்றம். இதற்கு கிருஷ்ணன் சொல்லும் பதில் என்ன என்பதை பார்க்கலாம்.

அர்ஜூனன் கிருஷ்ணனிடம், “கண்ணா... குற்றங்களில் எது மன்னிக்கக்கூடிய குற்றம்? எது மன்னிக்க முடியாத குற்றம்?”

இதற்கு கிருஷ்ணன் உரைத்த பதிலானது, “ நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. அதில் முதல் குற்றமாவது யாதெனில் நீதி, நேர்மை, தர்மங்களில் விருப்பாமையால் செய்யப்படும் குற்றமாகும்.

ஒருவன் தன் பேராசையின் காரணத்தால் தான் விரும்பியதை எப்பேர்பட்டாவது பெற நினைப்பான். இவன் ஒருவகை என்றால் மற்றொருவன், தான் நினைத்ததை செய்தே ஆகவேண்டும் என நினைப்பான். அதற்காக அடுத்தவர்களின் வாழ்க்கையை குழிபறிக்கவும் தயங்கமாட்டான். இத்தகைய குற்றவாளிகள் மிகவும் அபாயகரமானவர்கள். ஏனெனில், இவர்கள் சுயநலக்காரர்கள். இவர்களைப் போன்றவர்கள் தங்களது எண்ணம் ஈடேறுவதற்காக அடுத்தவர்களுக்கு தீங்கு தரும் செயலை செய்வதற்கு ஒரு போதும் தயங்குவதில்லை. இத்தீங்கு தரும் செயலானது பொய்சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதலில் தொடங்கி கொலை செய்வது வரையில் செல்லும். தனது பேராசையால் எழும் இத்தகைய குற்றச்செயல்களில் இருந்து அவர்கள் தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பதில்லை. அவர்களின் பேராசையானது அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இவர்களுக்கு நீதி, நேர்மை, தர்மம் இவைகளைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. இவற்றை விரும்பி ஏற்பதும் இல்லை. ஆகவே தர்ம நெறிகளில் விருப்பமின்மையால் செய்யப்படும் இத்தகைய குற்றங்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இரண்டாவது குற்றம் என்பது யாதெனில், இயலாமையால் செய்யப்படும் குற்றம் ஆகும்.

பசி, நோய், உயிருக்கு ஆபத்தான நிலைப் போன்ற கொடுமையான காரணங்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் மன்னிக்கப்படலாம். அதாவது ஒருவருன் மற்றொருவனுக்கு உதவி செய்ய நினைத்து அது உபத்திரவமாக முடியும் பொழுது அதனால் ஏற்படும் குற்றம் மன்னிக்கப்படலாம். ஒருவன் தன் கண்ணுக்கு எதிரே நடக்கும் விபத்தினை அல்லது தீங்கான செயலை தடுக்கமுற்பட்டு அது இயலாமல், அவ்விபத்தானது, தீங்கானது நடந்து விட்டாலோ, அது குற்றம் அல்ல.. அதே போல் இயலாமையால், ஒருவன் திருடவோ, பொய் சொல்லவோ செய்தால் அத்தகைய குற்றமும் மன்னிக்கப்படலாம் என்று கண்ணன் அர்ஜூனனுக்கு கூறினார்.